தாம்பரம் அருகே பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் நாகராஜ் (41) இவர் இதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு நாகராஜ் பக்கத்து வீட்டில் உள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த பத்து வயது சிறுமியை கடத்தி வந்து நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி நசீமாபானு, குற்றவாளியான நாகராஜூக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி நாகராஜை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி