பள்ளி துவங்கிய முதல் நாளில், மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். பள்ளி துவக்க நாளிலேயே மாணவ - மாணவியருக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம், திருக்காலிமேடு மாநகராட்சி துவக்கப் பள்ளியில், ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு பெற்றோர் பலர் தங்களது ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளுடன் காத்திருந்தனர்.
முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு தலைமை ஆசிரியர் மோகன்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாடப்புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கினர்.
காஞ்சிபுரம் யதோக்தகாரி மாநகராட்சி துவக்கப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கல்வி கடவுள் சரஸ்வதி தேவி படத்திற்கு மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்யப்பட்டது. மாணவ - மாணவியர் சரஸ்வதி தேவியை வழிபட்டபின் வகுப்பறை சென்றனர்.