ஐந்து ரதங்கள், கடற்கரை கோவில், அர்ஜூன் சிற்ப பகுதி ஆகிய இடங்களில் முகாமிடுகின்றன. அவற்றின் ஓட்டுனர்கள், ஆட்டோக்களை சாலையை அடைத்து நிறுத்தி, பயணியரை ஏற்றி இறக்குகின்றனர். வாகனத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணியர் எண்ணிக்கையைவிட, அதிக பயணியரை அடைத்துச் செல்கின்றனர். அதிக நடை சவாரி செல்வதற்காக, போட்டி போட்டு, ஒன்றை ஒன்று முந்தி, அதிவேகத்தில் விபத்து ஆபத்துடன் ஓட்டுகின்றனர்.
பஸ் நிறுத்தமிடத்தில் இருந்து, சிற்ப பகுதி, கடற்கரை நீண்டதொலைவில் உள்ளதாக கூறி, பயணியரிடம் குறைந்தபட்சம் தலா 50 ரூபாய் அடாவடி கட்டணம் வசூலிக்கின்றனர். ஷேர் ஆட்டோக்கள் இயக்கத்தால், கடும் நெரிசல் ஏற்பட்டு, பிற வாகனங்கள் செல்ல இயலாமல், போக்குவரத்து முடங்குகிறது. பாதசாரி பயணியர் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். அவற்றை போலீசார் கட்டுப்படுத்த, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.