மணலி: கல்லூரி மாணவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மணலி பகுதியை சேர்ந்த மித்லேஷ், சக மாணவியுடன் நேற்று (ஏப்ரல் 7) காரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பெருங்களத்தூர் சிக்னல் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி ஜிஎஸ்டி சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் சிக்கிய இருவரும் மீட்கப்பட்டனர். கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி