சோழிங்கநல்லூர்: 'யு- டர்ன்' செய்தவர் எதிரே வந்த பைக் மோதி பலி

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த உத்தண்டியை சேர்ந்த நாகராஜ் (45) என்பவர், பனையூரில் இருந்து கோவளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் யு-டர்ன் செய்துள்ளார். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி