சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி, அன்புச்செல்வன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அன்புச்செல்வனின் நடவடிக்கைகள் சரியில்லாததால் மாணவி அவரை விட்டு விலகியுள்ளார். ஆனால் காதலை தொடரும்படி அன்புச்செல்வன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், சென்னை எம்கேபி நகர் போலீசார் அன்புச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.