மாமல்லபுரத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: - இம்மாநாட்டில் லட்சோபலட்சம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக, மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு மாநாடாக இந்த மாநாடு அமையும். 

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், டாக்டர் ராமதாசின் 40 ஆண்டு கனவான வன்னியர்களின் உரிமை முழக்கம். அதேபோல் எல்லா சமூகத்தினருக்கும் உரிய பங்கீடு கிடைக்க வேண்டும் என்பதாகும். காவல் துறை இந்த மாநாட்டிற்கு பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்துள்ளது. அவர்கள் சொல்லுகிற சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது. ஆனாலும் காவல் துறைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்த மாநாட்டிற்கு வாகனங்களில் வருகிறவர்கள் பாதுகாப்பாக வந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என் ஜி.கே. மணி கூறினார்.

தொடர்புடைய செய்தி