தமிழக காவலர் வீட்டுவசதி வாரியம் வாயிலாக, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் 6.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையமும், சின்னகாஞ்சிபுரத்தில் 1.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக காவலர் வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ், இரு இடங்களிலும் நடந்து வரும் கட்டுமானப்பணியை நேற்று பார்வையிட்டார்.
ஒப்பந்ததாரரிடம் கட்டுமானப்பணி விவரத்தை கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனை வழங்கி, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகம், டி.எஸ்.பி., சங்கர் கணேஷ், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.