அதன்படி, குணா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின் மீண்டும் குணா ஜாமினில் வெளியே வந்த நிலையில், மதுரமங்கலம் கிராமத்தில் நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் மக்கள் நலப்பணியாளாக உள்ள, அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 59, என்பவரை தாக்கினார். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் மோகன் அளித்த புகாரை அடுத்து, போலீசார் குணாவை இம்மாதம் 6ம் தேதி கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், எஸ்.பி., சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்வி, குணாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்