தகவலின்படி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு பெண் உள்பட இருவரை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் ஏழுமலை என்பவரது மகன் ராஜ் மற்றும் சந்தியா என்கிற மகேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இவர்கள் வழக்கமாக வாயலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீனா (24) மற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் விஷ்வா (24) ஆகிய இருவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தபோது அவர்கள் வீட்டிலிருந்து 10 கிராம் பாக்கெட் வீதம் 70 கஞ்சா பாக்கெட்டுகள் 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இந்த நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.