சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், இந்த டாரஸ் லாரிகள் தார்ப்பாய் மூடாமல், வேகமாக செல்வதால் விபத்து ஆபத்து நிலவுகிறது. குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி இந்த சாலையில் உள்ள நிலையில், வேகமாக செல்லும் லாரிகளால் மாணவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால், இச்சாலையில் பள்ளி நேரத்தில் லாரிகள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
படகில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து.. நடுக்கடலில் மீனவர்கள் தவிப்பு