இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், கோவளம், மாம்பாக்கம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2000 பேர் தனித்தனி வேன்களில் முட்டுக்காடு தக்ஷிணசித்திர கலைப்பண்பாட்டு மையத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நாட்டுவழிப் பாடல்களால் வடிவமைக்கப்பட்ட செட்டிநாடு அரண்மனை வீடுகள், மரத்தால் ஆன கேரள வீடுகள், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் உள்ள வீடுகள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றை 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தக்ஷிணசித்திர கலைப்பண்பாட்டு மையத்தில் சுற்றிப் பார்த்து வந்து ரசித்தனர்.
மாணவர்களுடன் வந்திருந்த அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் பழங்கால வீடுகள், அவற்றை எப்படி பயன்படுத்தினர், பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை கதை அம்சங்களுடன் எடுத்துக் கூறினர்.