சென்னை: தீபாவளி சீட்டு நடத்தி மோசடி.. தம்பதி கைது

தி. நகர், தர்மபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் புவனேஸ்வரி தம்பதி, தீபாவளி சீட்டு நடத்தி, சங்கீதவாணி உட்பட 250 பேரிடம் மாதம் 1,000 ரூபாய் வீதம் 11 மாதங்களுக்கு 27.50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். சீட்டு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவான அவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த மோசடி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி