தாம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜாஜ் பல்சர் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிப்டாப்பாக உடையணிந்த இளைஞர் ஒருவர் டூவீலரில் ஏறி, ஒவ்வொரு சாவியாகப் போட்டுப் பார்த்து, பின்னர் அதை எடுத்துச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது.