தொடர்ந்து காரின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் சீறிப்பாய்ந்த கார் எதிர்பாராதவிதமாக முன்னால் நின்றுகொண்டிருந்த சேவியரின் மீது பலமாக மோதியது. இதில் அலறித் துடித்துப் பலத்த காயமடைந்த சேவியரை மீட்ட தீபக் அவரது காரிலேயே அழைத்துக்கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். தொடர்ந்து சேவியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சேவியரின் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை