காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பி, 750 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரி நடுவே, ஏழு ஆண்டுகளாக வளர்ந்த கருவேலமரங்கள் உள்ளன. இந்த மரங்கள் கோடை வெயிலுக்கு, உலர்ந்த நிலையில் இருந்தன. மேலும், ஏரி முழுவதும் புல் உலர்ந்த நிலையில் இருந்தது. நேற்று, இரவு 7:00 மணி அளவில், மர்ம நபர்கள் ஏரி புல்லுக்கு தீ வைத்துள்ளனர். தீ வேகமாக பரவி, ஏரி நடுவே இருந்த கருவேலமரங்கள் தீயில் கருகி நாசமாகின.