போதையில் இருந்த ஐடி ஊழியரை தாக்கி ஐபோன் பறித்தவர்கள் கைது

சோழிங்கநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தமிழ்ச்செல்வன் (26) என்பவர் கடந்த 14ம் தேதி ஓ.எம்.ஆர். சாலை குமரன் நகர் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது போதையில் இருந்த அவரை தாக்கி, அவரிடமிருந்த ஐபோன் மற்றும் ரூ. 50,000 பணத்தை 3 பேர் பறித்துச் சென்றனர். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் (30) மற்றும் ஜெகன் (37) ஆகிய இருவரை நேற்று (மே 17) கைது செய்து ஐபோன் மற்றும் பணத்தை மீட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி