அச்சிறுப்பாக்கத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இ.எம்.ஆர் குழுவில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிவிழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு இ.எம்.ஆர் குழுவில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்றுகூடி சந்தித்தனர். எந்த உயர் பதவியில் இருந்தாலும் அனைவரும் பள்ளிப் பருவத்திற்கே சென்றது போல் பேசிக்கொண்டு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். தாம் படித்த வகுப்பறைக்குச் சென்று ஆசிரியர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர் மாணவர்கள் அப்போது பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். முஸ்தபா பாடலுக்கு முன்னாள் மாணவர்கள் நடனமாடி மெழுகுவர்த்தி ஏந்தி ஆசிரியரைச் சுற்றிவந்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி