ஆலந்தூர்: ஏரியில் மூழ்கி டூவீலர் மெக்கானிக் பலி

பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் கார்த்திகேயன் (40), குடிப்பழக்கத்தால் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலந்தூர் அடுத்த மூவரசம்பட்டு ஏரியில் அவர் சடலமாக மிதந்துள்ளார். இதுகுறித்து பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕