சென்னை அடுத்த திரிசூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி என்பவரது மகன் பாபு தொழுநோயாளி திரிசூர் இராமலிங்க நாயனார் வைத்தியர் தெருவில் வசித்து வருகிறார். நில தகராறு காரணமாக பல்லாவரம் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். இந்நிலையில் காவல் நிலையத்தில் மனு அளித்து நடவடிக்கை இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாளன்று பலமுறை மனு அளித்துள்ளார்.
மேலும் நில தகராறு காரணமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் தனது குடும்பத்தை தாக்கி வருவதால் செய்வதறியாது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர் தீயிட்டு கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.