பல்லாவரம்: பஸ்சில் பெண் பயணியிடம் 8 சவரன் நகை மாயம்

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த ஷோபியா அல்போன்சா மேரி (32) என்பவர், நேற்று முன்தினம் மாலை தேவகோட்டை செல்வதற்காக பொழிச்சலூரில் இருந்து குரோம்பேட்டைக்கும், பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கும் மாநகர பேருந்துகளில் வந்துள்ளார். தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது பேக்கில் இருந்த 5 சவரன் செயின் மற்றும் 3 சவரன் வளையல் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி