தாம்பரம்: இளம்பெண்ணிடம் அத்துமீறியவரை தட்டிக்கேட்ட 4 பேர் கைது

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் அத்வைது தாஸ் (36) அப்பகுதி இளம்பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதி பெண்கள் இளைஞரைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக இளைஞர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மே 30 அன்று சம்பா (47), ரமேஷ் (40), பாபு (25), மணிகண்டன் (37) ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி