சோழிங்கநல்லூர்: மின்சாரம் தாக்கி 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்த 14 வயது மாணவர் கணேசன், சேலையூர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (மே 14) மாலை டியூஷன் சென்டருக்கு சென்றபோது, முதல் தளத்தில் மின்கம்பி மீது கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரும்பாக்கம் போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி