மதுராந்தகத்தில் சிவன் கோவிலில் 108 சங்க அபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மீனாட்சி அம்மாள் சமேத வெண்காட்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 48 நாட்களாக மீனாட்சி அம்மாள் சமேத வெண்காட்டீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் 48-வது நாளான இன்று மீனாட்சி அம்மாள் மற்றும் வெண்காட்டீஸ்வரர் சுவாமிகளுக்கு 108 சங்க அபிஷேகம் மற்றும் அபிஷேக திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த மண்டல பூஜை நிறைவு விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி