தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கி இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் சமூக வலைதளங்களில் அவரின் ஆபாச புகைப்படங்களை மர்மநபர் ஒருவர் பதிவிட்டு வருவதாக தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த செயலில் ஈடுபட்டது அந்த பெண்ணின் ஆண் நண்பரான சிவபிரகாஷ் (24) என்பது தெரிந்தது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கியிருந்த சிவபிரகாஷை போலீசார் கைது செய்து தாம்பரம் அழைத்து வந்தனர்.