சுங்குவார்சத்திரம்: கணவருடன் ஸ்கூட்டரில் பெண் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

சுங்குவார்சத்திரம் அருகே, கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் நிவேதா தம்பதி, நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வாலாஜாபாத் - கீழச் சேரி சாலையில் மொளச்சூர் அருகே சென்ற லாரி மீது ஸ்கூட்டர் உரசி கீழே விழுந்தனர். இதில் லாரி சக்கரம் நிவேதாவின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெகதீஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி