வேலூர்: அசத்திய மாணவர்கள்

காட்பாடி என்.டி.டி.எஃப். நிறுவனம் சார்பில் நடைபெற்ற 'ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2026' கண்காட்சியில், மெக்கட்ரானிக்ஸ் மற்றும் டூல் மேக்கிங் பிரிவுகளில் பயிலும் 60 மாணவர்கள் ரோபோடிக்ஸ், ஆட்டோமேட்டிக் கிளீனிங், ஐ.ஓ.டி. போன்ற நூறு படைப்புகளை உருவாக்கினர். பத்து மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 654 மாணவ, மாணவியர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு, பொறியியல் மீதான ஆர்வத்தையும் நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கங்களைப் பெற்றனர். மாணவர்களுக்கு பொறியியல் மீது ஆர்வத்தை உண்டாக்கும் நோக்கிலும், தொழில்நுட்பங்களை விளக்கும் வகையிலும் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி