அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் நடத்திய சோதனையில், 'டிப்பென்டடோல்' எனும் போதை மாத்திரை இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மண்ணிவாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்த சுமன், 20, முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த ஆகாஷ், 23, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இருவரும், மும்பையில் இருந்து ஆன்லைன் வழியாக கொரியரில் ஆர்டர் செய்து, போதை மாத்திரையை வாங்கி உப்போகித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.