இந்த நிலையில் நாளைய தினம் 2025 புத்தாண்டு தினம் என்பதால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டு எந்த விபத்துகளும் இந்த பள்ளத்தினால் ஏற்படக்கூடாது என மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர்கள் ஒன்றிணைந்து சிமெண்ட் கலவையை கொண்டு ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் ஜல்லி கொட்டி சிமெண்ட் கலவையால் போட்டு பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து காவலர்களின் இந்த செயலுக்கு சக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு