அதன் பின் மறுநாள் நெல்லிக்குப்பம், பெருமாட்டுநல்லூர், காயாரம்பேடு ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்.களில், அந்த மர்ம நபர் 39,500 ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்த குறுஞ்செய்தி வந்ததும், தன் கணக்கு உள்ள வங்கி கிளைக்கு சென்று ஸ்ரீராம்குமார் விசாரித்த போது, வேறு கார்டை கொடுத்து ஏமாற்றி, மர்ம நபர் பணம் எடுத்தது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருப்போரூர் போலீசார் விசாரித்ததில், வேலூர் மாவட்டம், கழிஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், 34, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் ஏற்கனவே, இதேபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு, கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, திருப்போரூர் போலீசார் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்