இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி வந்தனர். சாலையை சீரமைக்க, கிராமங்களினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பாக, நமக்கு நாமே திட்டத்தில், 3.78 கோடி ரூபாயில் சாலை அமைக்க, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை, கையால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக, கிராமங்களினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், சாலை விரைவில் சேதமடைய வாய்ப்புள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமங்களினர் வலியுறுத்தி உள்ளனர்.