தாம்பரம்: பொக்லைன் ஆப்பரேட்டரை தவெக நிர்வாகி தாக்கும் வீடியோ

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அழகுதுரை என்ற பொக்லைன் ஆப்பரேட்டரை, தவெக கொடி கட்டிய காரில் வந்த ஜெய் கிருஷ்ணன் என்பவர் தாக்கியுள்ளார். 'உனது முதலாளி எங்கே' என்று கேட்டு, அழகுதுரையை கன்னத்தில் அறைந்து, தன்னுடன் வந்த ஆதரவாளர்களிடம் அவரை காரில் தூக்கிப் போடச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ஜெய் கிருஷ்ணன் தவெகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி