மாமல்லபுரத்தில் விஷப்பூச்சி கடித்து மாணவி பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த மணவாளன் மகள் மனோஜிதா, (20). கழிப்பட்டூர் தனியார் கல்லுாரியில், பி. டெக். , கெமிக்கல் இன்ஜியரிங் மூன்றாம் ஆண்டு படித்தார். கடந்த 26ம் தேதி, வீட்டில் உறங்கியபோது, காலை 4: 45 மணிக்கு, அவரது இடதுகை நடுவிரலில் விஷ பூச்சி கடித்துள்ளது.

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை, மாமல்லபுரம் போலீசில் நேற்று (செப்.,29) அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி