பின், லாரிகள் வாயிலாக, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பட்டா கிராமத்தில் இயங்கிவரும் தனியார் கல் குவாரி ஒன்று, பூமியில் வெடி வைத்து பாறைகளை உடைத்து எடுத்து வருகிறது. பாறைகளை வெடிவைத்து உடைக்கும் போது, அங்கிருந்து சிதறும் கற்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களில் விழுகிறது. அப்போது, அருகிலுள்ள நிலங்களில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டுள்ள கால்நடைகள் மீது கற்கள் விழுந்து பலத்த காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் விவசாய நிலங்களில் வேலை செய்யும், விவசாயிகள் மீதும் கற்கள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மகளிர் டி20 உலகக்கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்