முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், , ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தென்னரசுக்கும் தாம்பரம் எம்எல்ஏ சரத்குமாருக்கும் தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரவையில் இணையும் அவர்களுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.