அப்போது அங்கு தங்கியிருந்த பிரபல ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது பிரபல ரவுடி அசோக் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார். பின்பு போலீசாரை அடித்துவிட்டு தள்ளிவிட்டு ஓடினார். அப்போது தற்காப்பிற்காக போலீசார் ரவுடி அசோக் மீது காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். பின்பு காயம்பட்ட அசோக்குமாரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பிரபல ரவுடி அசோக் மீது சரித்திர பதிவு குற்றவாளி ஆவார். இவர் ஏற்கனவே ஏராளமான கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.தற்பொழுது அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முகலாய் முட்டை கிரேவி செய்வது எப்படி?