தேசிய நெடுஞ்சாலையில் மூதாட்டி மறியல் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கரை மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம்மாள். இவர் சோத்துப்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனுக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தெருநாய்களை பிடிக்க உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரை சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள தெருநாய்களை அதிகாரிகள் பிடிக்கவில்லை எனக் கூறி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மூதாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி