இப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்காக, மாரியம்மன் கோவில் தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன், 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
தொட்டியின் அடிபாகம் மற்றும் துாண்களின் சில பகுதிகளில் சிமென்ட் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.
ஆனால், சேதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், தொடர்ந்து நீர் ஏற்றப்பட்டு, குழாய் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.