கல்பாக்கம் அருகே இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஒரு இளைஞரை சத்தியால் தாக்கியதை தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதனால் வீடுகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.