மதுராந்தகத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து மூதாட்டி பலி

மதுராந்தகத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தர் பேட்டை அருளால் ஈஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த மாதவி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் அவருடைய மகனுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரகாஷ் அய்யனார் கோவில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார்.

மாதவி அவர்களின் மகன் பிரகாஷ் வேலைக்குச் சென்ற நிலையில் குடிசை வீட்டில் தனியாக இருந்த 75 வயது மதிக்கத்தக்க மாதவி என்பவர் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக குடிசை வீடு தீ பற்றி எரிய தொடங்கியது.

இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மதிக்கத்தக்க மாதவி என்ற மூதாட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து தீ விபத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி