ஓலா, உபர், ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் இன்று (பிப்.07) முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் அனுப்பியுள்ள தொழிற்சங்கத்தினர், ஆட்டோ, டாக்ஸி, பைக் டாக்ஸிகளுக்கு உடனடியாக குறைந்தபட்ச அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் நடைபெற உள்ளது.