இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள் பல்வேறு அலங்காரத்துடன் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் ஸ்ரீ அஸ்தராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அஸ்தராஜர் கடலில் இறங்கி நீராடினார். அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் கடலில் இறங்கி கோவிந்தா, கோவிந்தா என முழங்கினர். புனித நீராடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதுரங்கப்பட்டினம் மீனவ பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் கடலில் சீற்றம் சற்று அதிகமாக இருப்பதாகவும் அதனால் பக்தர்கள் யாரும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்தனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை