காட்டாங்கொளத்துார் ரயில் நிலையம் அருகே மரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வெங்கடேசன்(35) என தெரியவந்தது. சில நாட்களுக்கு முன் நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சென்றபோது, அது திருடு போனதால் மன உளைச்சலில் வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.