சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஒருங்கிணைத்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது. செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி மன்றம் மற்றும் எஸ்.டி.எஸ். பவுண்டேஷனும் இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், கானத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன், நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீமான் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு பணிகளில் சமூக சேவை புரிந்த பெண்களுக்கும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிர்களுக்கும் பரிசினை வழங்கி வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மியூசிக்கல் சேர், ஸ்பூன் லிங், பலூன் உடைத்தல், வாட்டர் பில்லிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மகளிர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்.டி.எஸ். பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர், கோவளம் மீனவ பஞ்சாயத்தார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.