மேல்மருவத்தூர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கல்லூரியின் முதல்வர் கோ.ப. செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு கோகோ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கல்லூரி மாணவிகளிடையே நடனம், பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. 

இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தீபிகா கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி