தமிழகத்தில் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளி செயல்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி ஒரே நேரத்தில் பொதுமக்கள் கார்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னை நோக்கிப் படையெடுப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இருந்து வரக்கூடிய ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.