மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், இப்பகுதிகளில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி