இதனால், அவசரகால சிகிச்சைக்கு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல இயலாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதை தவிர்க்க இந்த கிராமங்களின் மையப் பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த கோரி வந்தனர். அதன்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில், 1.20 கோடி ரூபாய் செலவில் தேவரியம்பாக்கம் கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வந்தது. இதற்கான பணிகள் முழுமை பெற்றதையடுத்து திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். தேவரியம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. சுந்தர், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.