கடந்த ஜன. 26ம் தேதி இரவு, தெரேசாபுரம் டாஸ்மாக் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு, நண்பர்களுடன் சூதாட்டம் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில், போந்தூரைச் சேர்ந்த நரேஷ் என்பவரை தலை மற்றும் கையில் சரமாரியாக அருண் வெட்டினார். இந்த வழக்கில், ஒரகடம் போலீசார் அருணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்வி, குண்டர் தடுப்பு சட்டத்தில் அருணை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அருணை சிறையில் அடைத்தனர்.