மதுராந்தகத்தில் சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் மதுராந்தகம் பணிமனையில் அச்சரப்பாக்கம் டு செய்யூர் - T19 எண்ணம் அரசு பேருந்து ஓட்டுனராக பணி செய்து வருகிறார். 

செல்வராஜ் தனது வீட்டிலிருந்து மதுராந்தகம் பணிமனைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் செல்கின்ற பொழுது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பொழுது, சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், அரசு பேருந்து ஓட்டுனர் செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி